தொழில்முயற்சியாளர்கள் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டிய 08 விளம்பர யுக்திகள்
இன்றைய வேகமான உலகில் வாடிக்கையாளரை எளிதாகவும் விரைவாகவும் அடைவதற்கான மிகச் சக்திவாய்ந்த கருவி கவர்ச்சிகரமான விளம்பரப்படுத்தலே. ஆனால், இக்கால மனிதர்கள் எந்த விடயத்திற்கும் அதிக நேரம் ஒதுக்க இயலாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் நேரமின்றி, ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் தான் நாம் உள்ளோம்.
இதனால், எமது உற்பத்திகளை விளம்பரப்படுத்தும் முறைகளும் இந்த யதார்த்தத்துக்கு ஏற்றவாறு மாற்றமடைய வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, ஒரு விளம்பரம் முதல் 03 விநாடிகளுக்குள் எமது இலக்கு வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்த்து, அதன் செய்தியை தெளிவாக புரியவைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதுவே ஒரு வெற்றிகரமான விளம்பரத்தின் அடையாளமாகும்.
அதே நேரத்தில், அதிக செலவு செய்யப்படும் விளம்பரங்களே விற்பனையை உறுதிப்படுத்தும் என்ற எண்ணம் தவறானது. மாறாக, குறைந்த செலவுடன் தெளிவான, நேர்த்தியான தகவல்களை வழங்கும் சமூக ஊடக விளம்பரங்கள் கூட அதிகமான வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடையக் கூடிய சக்தியைக் கொண்டுள்ளன.
அந்த அடிப்படையில், இந்தக் கட்டுரை மிகக் குறைந்த செலவில், அதிக விற்பனையை உருவாக்கக்கூடிய விளம்பரங்களை வடிவமைப்பதற்கான அடிப்படை உளவியல் அம்சங்களை எளிய முறையில் வழிகாட்டுவதாக அமைகிறது. வாடிக்கையாளரின் மனதை புரிந்து கொண்டு, குறுகிய நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விளம்பரங்களை உருவாக்க விரும்புவோருக்கு இது ஒரு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும்.
01. வாடிக்கையாளர்கள் உடனடியாகப் புரிந்துகொள்ளும் விளம்பரத்தை உருவாக்குங்கள்.
01. ஒரு யோசனை - ஒரு செய்தி - ஒரு விளம்பரம்
ஒரு சிறந்த விளம்பரத்தின் முக்கிய ரகசியம், ஒரே சந்தர்ப்பத்தில் ஒரே செய்தியை மட்டுமே வாடிக்கையாளரிடம் தெளிவாக கொண்டு சேர்ப்பதில்தான் உள்ளது. ஒரே விளம்பரத்தில் பல்வேறு தகவல்களை அதிகமாக சேர்க்க முயற்சித்தால், உண்மையில் சொல்ல வேண்டிய முக்கிய செய்தியே மங்கிப் போகும்.
வாடிக்கையாளர் நினைவில் நிலைத்திருக்க வேண்டியது ஒரே கருத்து:
- “தினமும் புத்துணர்ச்சியான பசும்பால் விநியோகம்”
- “உங்கள் மென்மையான சருமத்திற்கான இயற்கையான சோப்”
இத்தகைய எளிய மற்றும் நேரடியான செய்திகளே வாடிக்கையாளரின் கவனத்தை உடனடியாக ஈர்க்கும்.
அதே விளம்பரத்தில் விலை, தரம், தயாரிப்பு வரலாறு, சிறப்பு சலுகைகள் போன்ற பல விடயங்களை ஒன்றாக சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான தகவல்கள் விளம்பரத்தின் தாக்கத்தை குறைத்து, குழப்பத்தை மட்டுமே உருவாக்கும்.
👉 நினைவில் கொள்ளுங்கள்:
ஒரு விளம்பரம் = ஒரு நோக்கம் = ஒரு முக்கிய செய்தி.
இந்த முறையில் வடிவமைக்கப்படும் விளம்பரங்களே வாடிக்கையாளரை செயல்பட வைக்கும்.
02. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தி விளம்பரங்களை வடிவமையுங்கள்
வாடிக்கையாளர் எளிதாகப் புரிந்து கொள்ளும் மொழியில் சொல்லப்படும் செய்திகளே, விளம்பரத்தின் மீது அதிக கவனம், நம்பிக்கை மற்றும் ஈடுபாட்டை உருவாக்கும்.
புதிய, கடினமான சொற்கள் அல்லது இலக்கண ரீதியாக சிக்கலான மொழிநடைகள், விளம்பரத்தை புத்திசாலித்தனமாக காட்டலாம் . ஆனால் வாடிக்கையாளரின் புரிதலையும் தொடர்பையும் குறைத்து விடும்.
❌ கடினமான மொழி நடை
(அறிமுகமற்ற, அன்றாட பயன்பாட்டில் இல்லாத சொற்கள்)
எங்கள் சோப்பு உங்கள் சருமத்தின் உயிரணுக்களை மறுசீரமைத்து, டெர்மட்டாலஜிக்கல் சமநிலையை உருவாக்குகிறது.”
✅ சரியான மொழி நடை
(சிக்கலற்ற, அன்றாடத்தில் பேசப்படும், உடனடியாக புரியும்)
மென்மையான சருமத்திற்கான தினசரிப் பாதுகாப்பு
👉 நினைவில் கொள்ளுங்கள்:
வாடிக்கையாளர் புரிந்து கொள்ளாத சிக்கலான மொழி அல்ல, வாடிக்கையாளர் உணரக்கூடிய எளிய மொழியே ஒரு விளம்பரத்தை வெற்றியடையச் செய்கிறது.
03.உங்களது விளம்பரம் 03 செக்கனுக்குள் இலக்கு வாடிக்கையாளரால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
அதனால், நீங்களே உங்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள்:
ஒரு மிகப் பிஸியான வாடிக்கையாளர் நடந்து செல்லும் போதும், அல்லது ஸ்மார்ட்போனில் சமூக ஊடகங்களை ஸ்க்ரோல் செய்யும் போதும், என் விளம்பரத்தின் முக்கிய செய்தியை 3 விநாடிகளில் புரிந்து கொள்வாரா?”
உங்கள் பதில் “இல்லை” என்றால்:
➡️ அந்த விளம்பரத்தை இன்னும் குறுகியதாக மாற்றுங்கள்
➡️ இன்னும் எளிதான மொழியில் எழுதுங்கள்
➡️ ஒரே ஒரு முக்கிய நன்மையை மட்டும் காட்டுங்கள்
மேலும் சிறந்த வழி: உங்கள் விளம்பரத்தை உங்கள் வாடிக்கையாளர்களிடமே காட்டி, "இதன் அர்த்தம் உங்களுக்கு உடனே புரிந்ததா?" என்று கேட்டு பரிசோதித்துப் பாருங்கள்.
👉 நினைவில் கொள்ளுங்கள்:
3 விநாடிகளில் புரியாத விளம்பரம் = விற்பனையை இழக்கும் விளம்பரம்.
02. அதிகம் செலவு செய்யாது உளவியல் உபாயங்களைப் பயன்படுத்தி நம்பிக்கைத் தன்மையினை அதிகரித்தல்
04. ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் நினைவில் பதியுங்கள்
ஒரு விளம்பரத்தை வாடிக்கையாளர் மீண்டும் மீண்டும் பார்க்கும்போது, அந்த விளம்பரத்துடன் தொடர்பான நினைவாற்றல் தானாகவே அதிகரிக்கிறது. நினைவில் நிற்கும் விளம்பரங்கள் தான் நம்பிக்கையை உருவாக்கும்.
அதனால், ஒவ்வொரு முறையும் புதிய புதிய விளம்பரங்களை உருவாக்குவதற்குப் பதிலாக,
👉 ஒரே முக்கிய விளம்பரச் செய்தியை
👉 பல்வேறு ஊடகங்கள் வழியாக
👉 மீண்டும் மீண்டும்
இலக்கு வாடிக்கையாளரிடம் கொண்டு செல்லுங்கள்.
உதாரணமாக:
- உங்கள் சொந்த விற்பனை நிலையத்தில் விளம்பரத்தை காட்சிப்படுத்துங்கள்
- உங்கள் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளிலும் அதையே காட்சிப்படுத்துங்கள்
- உங்கள் தொழிலுக்கான உத்தியோகபூர்வ Facebook / Instagram முகப்பக்கத்தில் அதே விளம்பரத்தை பதிவிடுங்கள்
- WhatsApp Status-இல் தொடர்ந்து அந்த விளம்பரத்தை பகிருங்கள்
பல விளம்பரங்களை ஒரே நேரத்தில் காட்டுவதைக் காட்டிலும், ஒரே விளம்பரத்தை பல வழிகளில் அடிக்கடி காட்டுவது
👉 இலக்கு வாடிக்கையாளரை எளிதாகவும்
👉 வேகமாகவும்
👉 உறுதியான முறையிலும்
அடைந்துவிட உதவும்.
05. வாடிக்கையாளர் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சொல்லுங்கள்
👉 “இப்போ நான் என்ன செய்ய வேண்டும்?” என்று யோசிக்க வேண்டிய நிலை வரக்கூடாது.
அதனால், உங்கள் ஒவ்வொரு விளம்பரத்திலும்:
- தொலைபேசியில்அழைக்க வேண்டுமா?
- WhatsApp செய்ய வேண்டுமா?
- கடைக்கு வர வேண்டுமா?
- Order செய்ய வேண்டுமா?
என்பதை தெளிவாகவும், நேரடியாகவும் குறிப்பிடுங்கள்.
தெளிவான வழிகாட்டுதல் இல்லாத விளம்பரம்
👉 கவனிக்கப்படும்
👉 ஆனால் செயல்பாடாக மாறாது.
தெளிவாக சொல்லப்படும் அழைப்பு (Call to Action) தான்
👉 பார்வையாளரை
👉 வாடிக்கையாளராக
மாற்றுகிறது.
06. வாடிக்கையாளர் உணர்வுகளுக்கு முன்னுரிமையளியுங்கள்

வாடிக்கையாளர்கள் எப்போதுமே கொள்வனவுத் தீர்மானங்களை எடுப்பதில் அவர்களது உணர்வுகளே செல்வாக்குச் செலுத்தும் அதே வேளை குறித்த முடிவினை அவர்கள் தர்க்க ரீதியில் நியாயப்படுத்த முயல்வர். எனவே எப்போதுமே உங்களது விளம்பரங்களில் உங்களது இலக்கு வாடிக்கையாளர்களின் உணர்வுகளை தூண்டுவனவாக விடயங்களையும், வசனங்களையும் வடிவமையுங்கள்.
உதாரணமாக:
🔒 பாதுகாப்பு
– பாதுகாப்பான பயணம்
– சிறுவர்களுக்கு முழுமையாக பாதுகாப்பானது
💰 சேமிப்பு
– இப்போது ரூபா 170/= சேமிப்பு
– குறைந்த செலவில் அதிக மதிப்பு
🤝 நம்பகத்தன்மை
– அனைவரின் ஒரே தெரிவு
– ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை
எப்போதும் உணர்வுபூர்வமான விளம்பரங்கள் வாடிக்கையாளர் மனதில் அதிகம் நினைவில் நிற்கின்றது.
விளம்பர செலவை குறையுங்கள் - கடினமாக உழையுங்கள்
07. அனைத்து ஊடகங்களிலும் ஒரே மாதிரியான விளம்பரங்களையே பகிரவும்.
உங்களுடைய துண்டுப்பிரசுரம், Facebook முகப்பக்க பதிவு, WhatsApp Status, Poster – எங்கு பார்த்தாலும் வாடிக்கையாளருக்கு அதே விளம்பரம், அதே செய்தி தோன்ற வேண்டும்.
ஏனெனில், ஒரே விளம்பரத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது
👉 அது வாடிக்கையாளர் மனதில் இலகுவாக புரியும்
👉 நினைவில் நிலைத்து நிற்கும்
👉 அதனுடன் நம்பிக்கை உருவாகும்
பல விளம்பரங்களை மாற்றி மாற்றி போடுவதற்குப் பதிலாக, ஒரு வலுவான விளம்பரத்தை பல ஊடகங்களில், பல முறை பகிருங்கள்.
👉 நினைவில் நிற்கும் விளம்பரம்
👉 நம்பிக்கையை உருவாக்கும்
👉 விற்பனைக்கு வழிவகுக்கும்
08. உங்களுடைய விலை — வாடிக்கையாளரது நம்பிக்கை.
தெளிவற்ற, பொருத்தமற்ற விலையிடல்
👉 உங்கள் பொருளின் தரத்தின்மேல் சந்தேகத்தை உருவாக்கும்
👉 நிறுவனத்தின் மீது நம்பிக்கையின்மையை அதிகரிக்கும்
👉 காலப்போக்கில் விற்பனை குறைவதற்கு காரணமாகும்
“சிறப்பு விலை உண்டு”
“தள்ளுபடி வழங்கப்படும்”
“குறைந்த விலையில் கிடைக்கும்”
👉 எவ்வளவு? எப்போது? எப்படி?
வாடிக்கையாளருக்கு புரியவில்லை → சந்தேகம் → வாங்காமல் விலகல்
✅ தெளிவான விலையிடல் (சரியான நடைமுறை)
விலை: ரூ. 1,200
விலைக் கழிவு: ரூ. 200 (இந்த வாரம் மட்டும்)
இப்போது செலுத்த வேண்டியது: ரூ. 1,000
👉 தெளிவு → நம்பிக்கை
👉 நம்பிக்கை → வாங்கும் முடிவு
தெளிவான + பொருத்தமான விலையிடல்
👉 உங்கள் பொருளின் மதிப்பை உயர்த்தும்
👉 வாடிக்கையாளரிடையே நம்பிக்கையை கட்டியெழுப்பும்
👉 நீண்டகால விற்பனை வளர்ச்சியை உறுதி செய்யும்
👉 நினைவில் கொள்ளுங்கள்:
விலை பேசும் மொழி தான் - நம்பிக்கை.







No comments