வவுனியாவின் ஸ்டைல் ஹப் – மலேஷியன் ரெய்லர்ஸ்
ஐந்து குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நடத்தும் இந்நிறுவனம், மலேசிய நாகரிக ஆடை வடிவமைப்பையும் இலங்கை தையல் கலை நுணுக்கத்தையும் ஒன்றிணைத்து, உள்ளூர் தொழில் முனைவோருக்கான சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
திருமதி உதயகுமாரன் நாகேஸ்வரி அவர்களின் வழிகாட்டுதலிலும், அவரின் மகன் நிரோஷன் மற்றும் மருமகள் சதூர்த்திகா ஆகியோரின் இளமையான தலைமையிலும், இந்த நிறுவனம் ஒரு புதிய நாகரிகப் பாலமாக மாறியுள்ளது.
![]() |
| வட மாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை - 2025 (மாநகரசபை மைதானம் - வவுனியா) |
மலேஷியன் ரெய்லர்ஸின் சிறப்பம்சம் என்னவென்றால், அது மலேசிய ஆடை நாகரிகத்தையும் இலங்கை உற்பத்தி திறமையையும் இணைத்து நவீன ஆடை வடிவமைப்புக்களை வழங்குகிறது.
அவர்களின் தனிப்பட்ட ஆடைகள் நவீன வடிவமைப்புடன், துல்லியமான தையலுடன், தரமும் நாகரிகமும் இணைந்த தோற்றத்தை வழங்குகின்றன.
மேலும், இந்நிறுவனம் 3 மாத தையல் பயிற்சி (சான்றிதழுடன்) வழங்குகிறது. இது எமது சமூகத்தின் தொழில்முறை திறனை வளர்க்கும் ஒரு வாய்ப்பாகும். இளம் பெண்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்கும் ஒரு பாதையாக இது அமைகிறது.
தற்போதைய பொருளாதார சூழலில் விலை உயர்வு, இறக்குமதி கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு குறைவு போன்ற இலங்கை பல சவால்களை சந்தித்து வருகிறது.
இந்நேரத்தில், குடும்ப அடிப்படையிலான இவ்வாறான தொழில் முயற்சியாண்மைகள் தான் உள்ளூர் பொருளாதாரத்தை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.
இவை பெரிய நிறுவனங்களைப் போல வெளிநாட்டை சார்ந்திருக்காது மாறாக, நாட்டின் நிலைத்திரு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதுடன் மக்களுக்கான தேவைகளையும் தற்சார்பு முறையில் பூர்த்தி செய்கின்றன எனலாம்.
மலேஷியன் ரெய்லர்ஸ் – குடும்பம், நாகரிகம், திறமை ஒன்று சேரும் இடம்.


.jpeg)



No comments